அப்பா இல்லாமல், எளிமையாக நடந்த விஜயகாந்த் மகனின் நிச்சயதார்த்தம்! மணப்பெண் யார் தெரியுமா? புகைப்படங்கள் இதோ!
vijaykanth son encagement photos viral
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து உச்சகட்ட நடிகராக கொடிக்கட்டி பறந்தவர் நடிகர் விஜயகாந்த். இவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் வல்லரசு, வாஞ்சிநாதன் போன்ற படங்களில் இவர் பேசிய அனல்பறக்கும் வசனங்கள் இன்றுவரை பிரபலம்.
மேலும் இயக்குனர் AR முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ரமணா திரைப்படம் தமிழ் சினிமாவின் அடையாளம் என்றே கூறலாம். அதானி தொடர்ந்து சினிமாவை விட்டு விலகிய அவர் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்னும் அரசியல் கட்சியின் தலைவராக இருந்து வருகிறார்.
மேலும் 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்ட மன்ற உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார். சமீப காலமாக இவர் உடல்நலம் முடியாமல் இருந்து வருகின்றார், இருந்தாலும் மக்களுக்காக அவ்வபோது குரல் கொடுத்து வருகின்றார். அவரது மனைவி பிரேமலதா. இவரும் விஜயகாந்திற்கு துணையாக அரசியலில் களமிறங்கி தீவிர பணியாற்றி வருகிறார்.
இவரது மூத்த மகன் விஜய பிரபாகரன். இவர் நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக கட்சியின் சார்பாக பிரச்சாரம் மேற்கொண்டு, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் விஜய பிரபாகரனுக்கும், கோவை பெரிய நாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த ஸ்டாம்ப்வெண்டர் இளங்கோவின் மகளுடன் மிக எளிமையான முறையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. மேலும் திருமண தேதி குறித்து பிரேமலதா விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சிங்காநல்லூரில் நடந்த இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் விஜயகாந்துக்கு உடல்நலம் சரியில்லாததால் அவர் கலந்து கொள்ளவில்லை.