கோலாகலமாக கொண்டாடப்பட்ட கேப்டனின் பிறந்தநாள்.! அசத்தலான வேற லெவல் பரிசளித்து தந்தையை கண் கலங்க வைத்த மகன்கள்!!
vijaykanth son gifted car for his birthday
தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றித் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்தவர் நடிகர் விஜயகாந்த். பிரபல நடிகரான இவர் ஏராளமா நாட்டுப்பற்று மிக்க படங்களில் நடித்து பெரும் ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். பின்னர் அரசியலில் களமிறங்கிய அவர் தேமுதிக கட்சியின் தலைவரானார்.
இவர் கட்சி தொடங்கிய ஆரம்பத்திலேயே ஏராளமான தொண்டர்கள் அவருடன் இணைந்து கட்சிக்காக தீவிரமாக உழைக்க துவங்கினர். மேலும் இதன் பயனாக இவர் தேமுதிக கட்சி சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராக அமரும் வாய்ப்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் முழு நேர அரசியலில் ஈடுபட முடியாத நிலைக்குச் சென்றார்.
இந்நிலையில் கட்சி பொறுப்புகள் அனைத்தும் அவரது மனைவி மற்றும் மைத்துனர் கைக்கு சென்றத. பின்னர் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் அமெரிக்காவில் தீவிர சிகிச்சை பெற்று கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு குணமாகி இந்தியா திரும்பினார். இந்நிலையில் விஜயகாந்த் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது 67-வது பிறந்தநாள் விழாவை கோலாகலமாக கொண்டாடியுள்ளார். அவருக்கு பல கட்சி தொண்டர்களும் ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.மேலும் பலரும் நலத்திட்ட உதவிகளையும் செய்தனர்.
இந்நிலையில் அவரது மகன்கள் விஜய பிரபாகரன் மற்றும் சண்முகபாண்டியன் ஆகியோர் தங்களது தந்தையின் பிறந்த நாளுக்காக விலை உயர்ந்த கார்களில் ஒன்றான பிஎம்டபிள்யூ காரை அவருக்கு பரிசாக கொடுத்துள்ளனர். பல கடன்களில் சிக்கி தவித்து வரும் சூழ்நிலையிலும் தனது தந்தையின் மகிழ்ச்சிக்காக ஆசையாக பரிசு கொடுத்த தனது மகன்களை கட்டிப்பிடித்து, ஆனந்தகண்ணீர் விடுத்து விஜயகாந்த் தன்னுடைய அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.