#Cobra Update: சியான் விக்ரமின் " கோப்ரா" பட ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்..! படக்குழு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!
#Cobra Update: சியான் விக்ரமின் கோப்ரா பட ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்..! படக்குழு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!
நடிகர் சியான் விக்ரம் நடிப்பில், இயக்குனர் அஜய் ஞானமுத்துவின் இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் "கோப்ரா". இந்த திரைப்படம் இந்த வருடம் மக்களால் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் முக்கியமான ஒன்றாகும்.
இந்த படம் தயாரிப்பாளர் லலித் குமாரின் 7 ஸ்கிரீன் தயாரிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் வெளியாக இருக்கிறது. இப்டத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஆகஸ்ட் 11-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என்று முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தற்போது கோப்ரா திரைப்படம் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதற்கு முன் ஆகஸ்ட் 11-ஆம் தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் எப்பொழுது வெளியாகும்? என்று காத்திருக்கின்றனர்.