"பாலிவுட் இயக்குனருடனான கருத்து மோதல்... முற்றுப்புள்ளி வைத்த சீயான்..." இயக்குனரின் உற்சாக பதில்!
பாலிவுட் இயக்குனருடனான கருத்து மோதல்.! முற்றுப்புள்ளி வைத்த சீயான்... இயக்குனரின் உற்சாக பதில்!
பாலிவுட் சினிமாவின் முன்னணி இயக்குனராக இருப்பவர் அனுராக் காஷ்யப். இமைக்கா நொடிகள் திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகராக அறிமுகமானவர் இவர். இவரது இயக்கத்தில் ராகுல் பட் மற்றும் சன்னி லியோன் நடிப்பில் கென்னடி என்ற திரைப்படம் வெளிவர இருக்கிறது.
இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவு செய்திருக்கும் அவர் நீங்கள் என்னை தொடர்பு கொண்ட செல்போன் எண் மற்றும் ஈமெயில் ஐடியை இரண்டு வருடங்களுக்கு முன்பே மாற்றி விட்டேன் அவை தற்போது பயன்பாட்டில் இல்லை என தெரிவித்து இருக்கிறார். மேலும் தன்னுடைய பெயரான கென்னடி பெயரிலேயே திரைப்படம் வெளியாக தனக்கு எந்த ஊரு பிரச்சனையும் இல்லை எனவும் கூறி இருக்கிறார் சியான் விக்ரம்.
இது தொடர்பாக பேசியிருக்கும் அனுராக் விக்ரம் அவரது பேரிலேயே படத்தை வெளியிட சம்மதித்ததாகவும் தனக்கும் அந்தப் படத்தின் பெயரை மாற்றுவதில் உடன்பாடு இல்லை எனவும் தெரிவித்திருக்கிறார். மேலும் தாங்கள் இருவரும் இணைந்து நிச்சயமாக ஒரு திரைப்படம் பண்ணுவோம் எனவும் உறுதியளித்திருக்கிறார் அனுராக்.