அட.. அப்படியே அப்பா மாதிரி இருக்காரே! நடிகர் விக்ராந்தின் மகனை பார்த்துருக்கீங்களா.! வைரலாகும் புகைப்படம்!!
அட.. அப்படியே அப்பா மாதிரி இருக்காரே! நடிகர் விக்ராந்தின் மகனை பார்த்துருக்கீங்களா.! வைரலாகும் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் கற்க கசடற என்ற படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் விக்ராந்த். இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறக்கும் தளபதி விஜய்யின் சித்தி மகன் ஆவார். அதனைத் தொடர்ந்து விக்ராந்த் முத்துக்கு முத்தாக, கவண், கெத்து, பக்ரீத் என பல படங்களில் நடித்துள்ளார்.
மேலும் அவர் நடித்த சில படங்கள் ரசிகர்களின் கவனத்தை பெறாமலே சென்றுள்ளது. ஆனாலும் முன்னணி நடிகராக வலம் வர போராடும் விக்ராந்த் அண்மையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அதில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
நடிகர் விக்ராந்தின் மனைவி மானசா. அவரும் சீரியல் நடிகை ஆவார். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் விக்ராந்த் அவரது மகனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை மானசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனைக்கண்ட நெட்டிசன்கள் விக்ராந்தின் மகன் அவரைப் போலவே இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.