திடீரென குடும்பத்தோடு மதம் மாறிய பிரபல வில்லன் நடிகர்.! எந்த மதத்திற்கு தெரியுமா?? தீயாய் பரவும் புகைப்படம்!!
திடீரென குடும்பத்தோடு மதம் மாறிய பிரபல வில்லன் நடிகர்.! எந்த மதத்திற்கு தெரியுமா?? தீயாய் பரவும் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் பிரபலமான வில்லன் நடிகராக வலம் வருபவர் நடிகர் சாய் தீனா. இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்று ஹிட்டான விருமாண்டி திரைப்படத்தில் மிரட்டலான சிறை வார்டனாக நடித்து அறிமுகமானார். முதல் படத்திலேயே இவர் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார்.
தொடர்ந்து அவர் புதுப்பேட்டை, கொம்பன், மாநகரம், வடசென்னை, மெர்சல், திமிரு பிடித்தவன், பிகில், மாஸ்டர், எதற்கும் துணிந்தவன் போன்ற பல வெற்றி திரைப்படங்களிலும் வில்லனாக நடித்துள்ளார். இவர் சினிமாவில் மட்டுமே வில்லன். நிஜத்தில் சமூகத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டவர்.பெருமளவில் சம்பளம் பெறாத நிலையிலும் அவர் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் வயதான முதியவர்கள் என வறுமையில் வாடும் பலருக்கும் தன்னால் இயன்ற நல்ல காரியங்களை, உதவிகளை செய்து வருகிறார். இதற்காகவே இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் நடிகர் சாய் தீனா திடீரென தனது குடும்பத்துடன் மதம் மாறியுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. அதாவது சாய் தீனா இந்து மதத்திலிருந்து 22 உறுதிமொழிகளை ஏற்று குடும்பத்துடன் புத்த மதத்திற்கு மாறியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் புத்த மத துறவி ஒருவருடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.