×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அவர நேர்ல பார்த்தா செத்துருவேன்! ஏன் தெரியுமா?? மனம் உருகிய வில்லன் நடிகர் பொன்னம்பலம்! கூறியதை பார்த்தீங்களா!!

அவர நேர்ல பார்த்தா செத்துருவேன்! ஏன்னா.. மனம் உருகிய வில்லன் நடிகர் பொன்னம்பலம்! கூறியதை பார்த்தீங்களா!!

Advertisement

தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டங்களில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் பொன்னம்பலம். சினிமாவில் சண்டை கலைஞராக, பயிற்சியாளராக வந்த அவர் பின் படங்களில் நடிக்க தொடங்கி சிறந்த, மிரட்டலான வில்லனாகவும் வலம் வந்தார்.

நடிகர் பொன்னம்பலம் சிறுநீரக கோளாறு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு அடையாறில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்பொழுது நடிகர் கமல் உதவி செய்த நிலையில் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவர் குணமடைந்தார். அதனைத் தொடர்ந்து ரஜினி, சரத்குமார், சிரஞ்சீவி, தனுஷ் என பல பிரபலங்கள் அவருக்கு உதவி செய்துள்ளனர்.

இந்த நிலையில் அன்மையில் பேட்டி ஒன்றில் தனக்கு உதவிய பிரபலங்கள் குறித்து பொன்னம்பலம் பேசியுள்ளார். அப்பொழுது அவர், விஜயகாந்த் எனக்கு கடவுள் போல். அவரை நான் நேரில் சென்று பார்க்கவில்லை. அவரை  பார்த்தால் செத்துவிடுவேன். எனக்கு இதயநோய், சிறுநீரக நோய் இருக்கு. அவரைப் பார்த்தால் எனது மனம் தாங்காது.

 ஒருத்தர் மேல அளவுகடந்த பாசம் வைத்துவிட்டால் அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாத போது நம்மால் அவர்களை பார்க்க முடியாது. அதனால்தான் நான் இதுவரை விஜயகாந்தை நேரில் சந்திக்கவில்லை அவர் தற்போது உடல் நலத்தோடு இருந்திருந்தால் எனக்கு முதல் நபராக உதவி செய்திருப்பார். மேலும் பல நடிகர்கள் எனக்கு உதவியுள்ளனர் என கூறியுள்ளார்

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Villain #Ponnampalam #vijayakanth
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story