அடஅட.. வேற லெவல்! வெளியானது விருமன் பட மதுர வீரன் பாடல்! ரொமான்ஸில் தெறிக்க விடும் கார்த்தி- அதிதி ஷங்கர்!!
அடஅட.. வேற லெவல்! வெளியானது விருமன் பட மதுர வீரன் பாடல்! ரொமான்ஸில் தெறிக்க விடும் கார்த்தி- அதிதி ஷங்கர்!!
இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'விருமன்'. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். மேலும் அவர்களுடன் பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சூரி, கருணாஸ் உள்ளிட்ட பலரும் விருமன் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கொம்பன் படத்திற்கு பின் ஆறு ஆண்டுகள் கழித்து முத்தையா - கார்த்தி கூட்டணி இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து படம் ரிலீஸாவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் ஆகஸ்ட் 12ஆம் தேதி விருமன் படம் வெளியாகும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் அண்மையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள "கஞ்சா பூ கண்ணால" பாடலின் ப்ரமோ வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது 'மதுர வீரன்' பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோவை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பாடலை யுவன் ஷங்கர் ராஜா மற்றும் அதிதி ஷங்கர் பாடியுள்ளனர். இயக்குனர் ராஜு முருகன் எழுதியுள்ளார். இதனை ரசிகர்கள் விரும்பி ரசித்து வருகின்றனர் .