வித்தியாசமான கெட் அப்பில் விஷால் - எஸ் ஜே சூர்யா! மார்க் ஆண்டனி திரைப்படத்தின் போஸ்டர் வெளியீடு!
வித்தியாசமான கெட் அப்பில் விஷால் - எஸ் ஜே சூர்யா! மார்க் ஆண்டனி திரைப்படத்தின் போஸ்டர் வெளியீடு!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருப்பவர் விஷால். இவர் இயக்குனர் மிஸ்கினுடன் ஏற்பட்ட மோதலை அடுத்து இயக்குனராகவும் மாறியிருக்கிறார். துப்பறிவாளன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இவர் தான் இயக்கயிருக்கிறார். சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் துவங்கயிருக்கிறது.
இந்நிலையில் நடிகர் விஷால் இயக்குனர் மற்றும் நடிகருமான எஸ். ஜே சூர்யாவுடன் இணைந்து பணியாற்றும் படம் மார்க் ஆண்டனி. 1960களில் நடக்கும் கேங்ஸ்டர் கதையினை மையமாகக் கொண்ட இந்த திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இத்திரைப்படத்தில் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யாவுடன் ரிது வர்மா, புஷ்பா படத்தில் மிரட்டலாக நடித்த பிரபல தெலுங்கு நடிகர் சுனில், நிழல்கள் ரவி, ஒய்.ஜி. மகேந்திரன், ரெட்டின் கிங்ஸ்லி அபிநயா ஆகியோர் நடித்திருக்கின்றனர்.
இத்திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். மினி ஸ்டுடியோ சார்பில் வினோத் குமார் தயாரிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக் குழு வெளியிட்டு இருக்கிறது. ட்விட்டரில் வெளியிடப்பட்ட இந்த போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யா ஆகிய இருவருக்குமே இந்த திரைப்படம் ஒரு முக்கியமான படமாக கருதப்படுகிறது. நடிகனாக தொடர்ந்து வெற்றிகளை கொடுத்து வரும் எஸ் ஜே சூர்யாவிற்கு தன்னுடைய வெற்றிகளை தக்க வைக்க இந்த படம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. சமீப காலமாக நடிகர் விஷால் நடித்த எந்த திரைப்படமும் ஒரு பெரிய வெற்றியை கொடுக்கவில்லை அதனால் திரைப்படத்தின் வெற்றி விஷாலுக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
வித்தியாசமான கதை களத்துடன் தயாராகி உள்ள இந்த படம் வெற்றி பெறும் பட்சத்தில் விஷாலின் திரைத்துறை பயணத்தில் இது ஒரு திருப்புமுனையாக அமையும்.