பெண் தோழியுடன் ஊர் சுற்றிய விஷால்.. ரசிகர்கள் பார்த்ததால் தலை தெறிக்க ஓட்டம்..
பெண் தோழியுடன் ஊர் சுற்றிய விஷால்.. ரசிகர்கள் பார்த்ததால் தலை தெறிக்க ஓட்டம்..
தமிழ் திரை துறையில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் விஷால். இவர் தமிழில் பல ஹிட் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை இடம் பிடித்துள்ளார். தமிழ் சினிமாவில் ஆக்சன் ஹீரோவாக வலம் வரும் விஷால் தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் நிலைநாட்டி இருக்கிறார்.
சில வருடங்களாக தொடர்ந்து தோல்வி படங்களையே அளித்து வந்த விஷால் சமீபத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் திரையரங்கில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.
இவ்வாறு சினிமாவில் உச்சத்தில் இருக்கும் விஷால் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. இவருடைய திருமணம் நிச்சயதார்த்தம் வரை சென்று பாதியில் நின்று விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற நிலையில் கிறிஸ்துமஸ் தின கொண்டாட்டத்திற்காக அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கிற்கு சென்றுள்ளார் விஷால். அங்கு இளம் பெண் ஒருவருடன் தோள் மீது கை போட்டு சுற்றி கொண்டிருந்திருக்கிறார். அந்த வீடியோவை ரசிகர் ஒருவர் இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார். அவர் விஷால் என்று அழைத்ததும் தலை தெறிக்க ஓட்டம் பிடித்தார் விஷால். இந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.