மத்திய அரசு அனுமதி கொடுத்தாச்சு! நீங்க எப்போ சொல்லபோறீங்க!! பெரும் எதிர்பார்ப்புடன் நடிகர் விஷால் வெளியிட்ட பதிவு!
Vishal thank central government to gave permission for shoot
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அசுரவேகத்தில் பரவி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் பலியானவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் இத்தகைய கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் மூடப்பட்டு, படப்பிடிப்புகளுக்கும் தடைவிதிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 5 மாதங்களாக படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத நிலையில் திரைப்பட தொழிலாளர்கள் பலரும் வருமானமின்றி பெருமளவில் தவித்து வந்தனர். இந்நிலையில் தமிழக அரசு சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு மட்டும் அனுமதி வழங்கியது.
இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகளை விவரித்து மத்திய அரசு படப்பிடிப்புக்கு அனுமதி அளித்தது. இதனைத்தொடர்ந்து விரைவில் தமிழக அரசும் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், படப்பிடிப்புக்கு அனுமதி அளித்த மத்திய அரசுக்கு நன்றி. பாதுகாப்பான சூழலுக்கு தேவையான அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி அனைத்து திரைப்பட படப்பிடிப்புகளும் விரைவில் தொடங்கும் என நம்புகிறேன் படப்பிடிப்பை எப்பொழுது தொடங்கலாம் என்ற தமிழக அரசின் அறிவிப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறேன் என்று விஷால் தெரிவித்துள்ளார்.