மோடி வெற்றிபெற்றதும் அந்தர் பல்டி அடித்த நடிகர் விஷால்! என்ன செய்தார் தெரியுமா?
Vishal wishes modi and bjp for verdict
மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கையானது இன்று காலை 8 மணிக்குத் தொடங்கிய நிலையில், இந்தியாவில் உள்ள பெரும்பாலான தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி சுமார் 346 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 92 இடங்களிலும்., பிற கட்சிகள் 104 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் ஓரிரு இடங்களை தவிர அணைத்து இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் பெரும்பாலான வாக்குகள் முன்னிலை பெற்று தனி பெரும்பான்மையுடன் பாஜக கட்சி ஆட்சி அமைக்க தயாராகிவருகிறது.
பாஜக வெற்றி பெற்றதும் பல்வேறு பிரபலங்களும், உலக நாட்டின் பல்வேறு தலைவர்களும் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாஜக வெற்றி பெற்றது குறித்து நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், “மக்களவைத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக கட்சியினருக்கு எனது வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.
பாஜகவின் நடவடிக்கைக்கு எதிராகவும், தமிழக அரசியலுக்கு எதிராகவும் பல்வேறு கருத்துக்களை கூறியதோடு அரசியலிலும் தன்னை முன்னிலை படுத்திக்கொண்ட விஷால் தற்போது பாஜக கட்சிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.