×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மறைவுக்கு முன் கடைசியாக வெண்ணிலா கபடிக்குழு ஹரி வைரவன் அனுப்பிய மெசேஜ்.! நடிகர் விஷ்ணு விஷால் உருக்கம்!!

மறைவுக்கு முன் கடைசியாக வெண்ணிலா கபடிக்குழு ஹரி வைரவன் அனுப்பிய மெசேஜ்.! நடிகர் விஷ்ணு விஷால் உருக்கம்!!

Advertisement

கடந்த 2009 ஆம் ஆண்டு சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் வெண்ணிலா கபடிகுழு. இப்படத்தில் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்திருந்தார். மேலும் அவருடன் சரண்யா மோகன், சூரி, அப்புகுட்டி, ஹரி வைரவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தை தொடர்ந்து ஹரிவைரவன் குள்ளநரி கூட்டம், நான் மகான் அல்ல உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் கிட்னி பிரச்சினையால் பாதிக்கப்பட்டு உடல் முழுவதும் வீங்கி சிகிச்சை பெற்று வந்த ஹரி வைரவன் அண்மையில் காலமானார். இவரது மறைவு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஹரி வைரவன் மரணம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வெண்ணிலா கபடி குழு படத்தின் ஹீரோ விஷ்ணு விஷால், கடந்த ஆறு மாதங்களாகவே ஹரி வைரவனுடன் தொடர்பில் உள்ளேன். அவருக்கு தேவையான பண உதவிகளை செய்து வருகிறேன். ஹரி வைரவனின் மனைவியிடம் கூட அவர்களது குழந்தையின் கல்விச்செலவை ஏற்பதாக தெரிவித்துள்ளேன். ஹரி வைரவன் மறைவுக்கு முன் தனக்கு  "உதவிகளுக்கு நன்றி மச்சான்" என்ற  வாய்ஸ் மெசேஜ் அனுப்பியுள்ளதாகவும் அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Hari Vairavan #vishnu vishal #help
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story