அச்சோ.. என்னாச்சு? ஏன் இந்த திடீர் முடிவு!! விஷ்ணு விஷால் வெளியிட்ட ஷாக் தகவல்! வருத்தத்தில் ரசிகர்கள்!!
அச்சோ.. என்னாச்சு? ஏன் இந்த திடீர் முடிவு!! விஷ்ணு விஷால் வெளியிட்ட ஷாக் தகவல்.!
தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். இப்படத்தின் மூலம் பிரபலமடைந்த அவர் பின்னர் தொடர்ந்து ஏராளமான சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவருக்கென பெரும் ரசிகர்கள் உள்ளனர்.
விஷ்ணு விஷால் இறுதியாக மனு ஆனந்த் இயக்கத்தில் உருவான எப்ஐஆர் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை விஷ்ணு விஷால் தனது நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெரும் வசூல் சாதனை படைத்தது.
இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள், குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்கள் போன்றவற்றை பகிர்வார். இந்த நிலையில் அவர் தற்போது தனது சமூக வலைதளப் பக்கங்களில் இருந்து சிலகாலம் பிரேக் எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஏன் இந்த திடீர் முடிவு ஏன்? என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.