தல ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த "விஸ்வாசம்" இயக்குனர்!. ரசிகர்கள் உற்சாகம்!.
தல ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஸ்வாசம் இயக்குனர்!. ரசிகர்கள் உற்சாகம்!.
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை வைத்துள்ள நடிகர் அஜித்குமார் தற்போது பிரபல இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் நான்காவது முறையாக இணைந்து "விஸ்வாசம் " படத்தில் நடித்து வருகிறார்.
அஜித்துடன் பில்லா, ஏகன், ஆரம்பம் போன்ற 3 படங்களில் நடித்த நயன்தாரா தற்போது நான்காவது முறையாக அஜித்துடன் "விஸ்வாசம் " படத்தில் இணைந்துள்ளார்.
இந்த படத்தில், விவேக், தம்பிராமையா, யோகி பாபு , ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார். இந்த படத்தினை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது.
விவேகம் படத்தை தொடர்ந்து, ரூபன் இப்படத்தையும் எடிட்டிங் செய்கிறார். படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்திய ஜோதி நிறுவனம் விஸ்வாசம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று காலை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், படத்தின் போஸ்டரை இயக்குனர் சிவா வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். மேலும் படத்தில் தல அஜித் இரட்டை வேடம், மற்றும் படம் அடுத்த ஆண்டு பொங்கல் அன்று வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
நீண்ட எதிர்பார்ப்புகளுக்கிடையே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த படத்தினையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துவருகின்றனர்.