மறைந்த எஸ்.பி.பிக்கு பியானோ வாசித்து இசைஅஞ்சலி! அதுவும் எந்த பாடலுக்கு தெரியுமா? நடிகர் விவேக் வெளியிட்ட வீடியோ!
Vivek playing piano for spb song
பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்கள் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் 5ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த வாரம் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். அவரது மரணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அவரது மறைவிற்கு இந்திய அளவில் திரைப் பிரபலங்கள், ரசிகர்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்தனர். தொடர்ந்து அவருடனான நினைவுகள் குறித்த அரிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் விவேக் சமீபத்தில் எஸ்.பி.பியின் அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி பாடலை பியானோவில் வாசித்து அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த அவர் அதில், எந்த வார்த்தைகளாலும் அவரது வெற்றிடத்தை நிரப்ப முடியாது! அந்த வெற்றிடத்தை இசையால் மட்டுமே நிரப்ப முடியும்! ஏனென்றால் இசையே அவர்தான்! என பதிவிட்டுள்ளார்.