ஒற்றை வார்தையால் அதிர்ந்துபோன அரங்கம்.! மிரண்டு போய் நடிகர் விவேக் வெளியிட்ட வீடியோ இதோ !
vivek post video about pigil
விஜய் அட்லீயுடன் மூன்றாவது முறையாக கூட்டணியில் இணைந்து நடித்துவரும் படம் விஜய் 63. இப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தில் பாடலாசிரியர் விவேக்கும் இடம்பெற்றுள்ளார்.
மேலும் விளையாட்டை மையமாக கொண்டு உருவாகி வரும் இப்படத்திற்கு பிகில் என பெயரிடப்பட்டுள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் நடிகர்கள் கதிர், ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, யோகி பாபு, விவேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் பிகில் திரைப்படம் தீபாவளிக்கு வெளிவர இருப்பதால் அதன் படப்பிடிப்பு வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் அவர்களும் அப்பாடலை யூடியூபில் பெரும் சாதனை செய்ய வைத்துள்ளனர்.
இப்படத்தில் விவேக் நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜயுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட விவேக் பேசும்போது பிகில் சூட்டிங்கிற்கு செல்கிறேன் என்று கூறியதும் அரங்கமே அதிரும் அளவிற்கு அங்கிருந்தவர்கள் பெரிய கூச்சலை எழுப்பியுள்ளனர்.
இதனை கேட்டு மிரண்டுபோன விவேக் இந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பிகில் என்று சொன்னதும் கூட்டத்தின் மகிழ்ச்சி பாருங்கள் என கூறி வெளியிட்டுள்ளார்.