மாஸ் தலைவா! அசத்தலான ஸ்டைலில் சூப்பர் ஸ்டாருக்கு வாழ்த்து கூறிய நடிகர் விவேக்! செம கெத்துதான்!!
தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் மாஸ் திரைப்படங்களில் நடித்து தற்போது சூப்பர் ஸ்டாராக
தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் மாஸ் திரைப்படங்களில் நடித்து தற்போது சூப்பர் ஸ்டாராக கொடிகட்டி பறப்பவர் நடிகர் ரஜினி. இவருக்கென கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் நடிகர் ரஜினி தற்போது சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்புகள் கொரோனாவால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இன்று இந்திய திரையுலகின் மிக உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் நடிகர் ரஜினிக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் விவேக் வாட்டர் பாட்டிலை சுழற்றி தனது ஸ்டைலில் சல்யூட் வைத்து ரஜினிகாந்த் விருது பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்கள் பலரும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வாழ்த்துக்களை தெறிக்க விடுகின்றனர்.