Vj சித்ராவின் வீட்டில் நடந்த பூஜை...ஒரு வருடம் ஆச்சா...வைரலாகும் புகைப்படம்...
Vj சித்ராவின் வீட்டில் நடந்த பூஜை...ஒரு வருடம் ஆச்சா...வைரலாகும் புகைப்படம்...
பிரபல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக இருந்து மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் சித்ரா. அவர் நடன ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்துகொண்டுள்ளார். அதனை தொடர்ந்து பல தொலைக்காட்சியிலும் ஏராளமான சீரியல்களில் நடித்துள்ள அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பாண்டியன் ஸ்டோர் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானார். அவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உருவானது.
இந்த நிலையில் சித்ரா கடந்த டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது அனைவருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இன்றுடன் அவர் இறந்து ஒரு வருடம் ஆன நிலையில் ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் சோகமான பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் சித்ராவின் இல்லத்தில் அவரின் புகைப்படம், முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி போஸ்டர் மற்றும் இதர சாமான்களை வைத்து பூஜை ஒன்றை நடத்தியுள்ளனர். தற்போது அப்புகைப்படம் இணையத்தில் வெளியானதால் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் சோக பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.