விஜய் டிவி சித்ராவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது..! மாப்பிள்ளை இவர் தானாம்..! வைரலாகும் புகைப்படம்.!
VJ Chithra got engagement news goes viral
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அண்ணன் தம்பி பாசம், கூட்டு குடும்பத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக நடித்து அனைவர் மத்தியிலும் பிரபலமானவர் சித்ரா.
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் இன்ஸ்டாகிராமில் பல புகைப்படங்களையும், வீடியோக்களையும் அவ்வப்போது பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு விரைவில் திருமணம் ஆக இருப்பதாகவும், தொழிலதிபர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
ஹேமந்த் என்ற தொழிலதிபருடன் இவருக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் மாப்பிள்ளையின் புகைப்படமும் இணையத்தில் வெளியாகி ஜோடி பொருத்தம் சூப்பராக இருக்கிறது என அனைவரும் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.