சின்னத்திரை நடிகை சித்ரா இறந்தது இப்படித்தான்.. காவல் துறை தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தகவல்..
சின்னத்திரை நடிகை சித்ரா தூக்குப்போடுதான் தற்கொலை செய்துகொண்டதாக நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளதாக காவல்துறை சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சின்னத்திரை நடிகை சித்ரா தூக்குப்போடுதான் தற்கொலை செய்துகொண்டதாக நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளதாக காவல்துறை சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா சில மாதங்களுக்கு முன்னர் தான் தங்கியிருந்த தனியார் விடுதி ஒன்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கு தொடர்பாக போலீசார் விசாரித்துவந்தநிலையில் பின்னர் வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு மீண்டும் விசாரணை தொடங்கியது.
இந்நிலையில் சித்ராவின் தற்கொலை தொடர்பாக கைதுசெய்யப்பட்டுள்ள சித்ராவின் கணவர் ஹேம்நாத்தின் ஜாமின் மனு நீதிபதி முன் விசாரணை வந்தநிலையில், சித்ரா தூக்கு போட்டுத்தான் தற்கொலை செய்துகொண்டார் என நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளதாக காவல்துறை தரப்பில் நீதிமாற்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து இந்த வழக்கு வரும் பிப்ரவரி மாதம் 5ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, விசாரணை அறிக்கையை வியாழக்கிழமை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.