சித்ராவின் தற்கொலைக்கு இதுதான் காரணம்.. காவல்துறை சமர்ப்பித்த முக்கிய அறிக்கை..
கணவனின் சந்தேகம்தான் சித்ராவின் தற்கொலைக்கு காரணம் என நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கணவனின் சந்தேகம்தான் சித்ராவின் தற்கொலைக்கு காரணம் என நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சித்ரா. மிகவும் பிரபலமான இவர் கடந்த மாதம் 9 ஆம் தேதி அன்று தான் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்நிலையில் நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். மேலும் இந்த வழக்கு தற்போது மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் சித்ராவின் நடத்தையில் அவரது கணவர் ஹேம்நாத் சந்தேகம் கொண்டதாலேயே நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஹேம்நாத்துக்கு ஜாமின் வழங்குவது தொடர்பாக பதிலளிக்க மேலும் கால அவகாசம் வேண்டும் எனவும் காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டது. இதனை அடுத்து இந்த வழக்கு தொடர்பான விசாரணை வரும் பிப்ரவரி 2 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.