பிரபல தொகுப்பாளினி டிடி சன் டிவி சீரியலில் நடித்துள்ளாரா... எந்த சீரியல் தெரியுமா.? வைரலாகும் புகைப்படம்!!
பிரபல தொகுப்பாளினி டிடி சன் டிவி சீரியலில் நடித்துள்ளாரா... எந்த சீரியல் தெரியுமா.? வைரலாகும் புகைப்படம்!!
விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமான தொகுப்பாளினியாக இருப்பவர் டிடி. இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி விருது வழங்கும் விழாக்கள், கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றையும் தொகுத்து வழங்கியுள்ளார் டிடி.
மேலும் வெள்ளித்திரையிலும் பல படங்களில் சில முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் டிடி. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து வருகிறார்.
இந்நிலையில் தொகுப்பாளினி டிடி ஆரம்பகாலகட்டத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான கோலங்கள் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த சீரியலில் டிடி நடித்துள்ள காட்சிகளின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அதனை ரசிகர்கள் தற்போது வைரலாகி வருகின்றனர்.