தொகுப்பாளினி டிடி யின் விவாகரத்து குறித்து முதன் முறையாக வாய் திறந்த டிடியின் கணவர்! காரணம் இதுதானா!
VJ DD husband open talk
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியின் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் அந்த டிவியில் ஒளிபரப்பான அதிகப்படியான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
அவை அனைத்தும் வெற்றி அடைந்தது. அதில் முக்கியமானவை ஜோடி நம்பர்1, சூப்பர் சிங்கர், காபி வித்த டிடி, ஹோம் ஸ்வீட் ஹோம் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். சமீபத்தில் கூட என்கிட்ட மோதாதே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இந்நிலையில் இவரது நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை காதலித்து கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். ஆனால் திருமணமான சில ஆண்டிற்குள் இருவரும் விவாகரத்து செய்துள்ளனர். ஆனால் அதற்கான காரணம் தெரியாமல் இருந்தது.
இந்நிலையில் தற்போது டிடியின் கணவர் ஒரு பேட்டி ஒன்றில் முதன் முறையாக அதற்கான காரணத்தை கூறியுள்ளார். அதாவது திருமணத்திற்கு பிறகு எந்த ஒரு நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்க கூடாது. எந்த படத்திலும் நடிக்கக்கூடாது என கூறியுள்ளார். அதனை அவர் கேட்கவில்லை. மேலும் ஆண் நண்பர்களுடன் அதிக பழக்கம் இதனால் தான் அவரை விவாகரத்து செய்ததாக கூறியுள்ளார்.