விஜய் டிவியில் இருந்து வெளியேறி ஜீ தமிழ் சென்ற விஜய் டிவி பிரபலம்! யார் தெரியுமா? இதோ!
Vjay tv rakshitha joined in zee tamil
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர்களில் ஓன்று சரவணன் மீனாட்சி. இதன் முதல் சீசனில் செந்தில் மற்றும் ஸ்ரீஷா இருவரும் இணைந்து நடித்தனர். இறுதியில் இருவரும் உண்மையாகவே காதலித்து கடைசியில் திருமணம் செய்துகொண்டனர்.
இதன் அடுத்த சீசனில் மீனாட்சியாக ரக்ஷிதா நடித்தார். இவரும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இந்நிலையில் சீசன் சீசனாக சீரியல் மாறிக்கொண்டே போனது ஆனால் மீனாட்சி கதாபாத்திரத்தில் நடித்த ரக்ஷிதா மட்டும் மாறவே இல்லை.
இறுதியாக சன் மியூசிக் புகழ் ரியோவுடன் இணைந்து சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்தார். நாட்கள் செல்ல செல்ல இந்த சீரியல் மீது இருந்த மோகம் மக்கள் மத்தியில் குறைந்துகொண்டே போனதை அடுத்து சீரியல் நிறுத்தப்பட்டது.
இந்த சீரியலை அடுத்து எந்த சீரியல், நிகழ்ச்சிகளில் கலந்துகொலாமல் இருந்த ரக்ஷிதா தற்போது ஜீ தமிழில் ஒரு நிகச்சியில் கலந்துகொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார். ஜீ தமிழில் புதிதாக தொடங்க இருக்கும் 3வது சீசன் Junior Super Star நிகழ்ச்சியில் தான் ரச்சிதா கலந்து கொள்ள இருக்கிறாராம். இந்த சீசன் தனக்கு மறக்க முடியாது ஒரு ஷோவாக இருக்கும் என்று கூறியுள்ளார் ரச்சிதா.