2.0 படத்தில் எமிஜாக்சனுக்கு டப்பிங் பேசுனது இந்த பிரபல நடிகையா? யார் தெரியுமா?
Who gave dubbing for amy jaksan 2pointo movie
இயக்குனர் சங்கர் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பிரமாண்டமாக ஓடிக்கொண்டிருக்கிறது 2.0 திரைப்படம். தான் ஒரு பிரமாண்ட இயக்குனர் என்பதை மீண்டும் உறுதி செய்துள்ளார் இயக்குனர் ஷங்கர். படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை எமிஜாக்ஸன் நடித்துள்ளார்.
திரைக்கதை, வசனம், பின்னணி இசை, 3D தொழிநுட்பம் என அனைத்தும் பிரம்மாண்டமாக உள்ளது. 2.0 படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை வாழ்த்தியும், பிரமித்தும் பார்த்து வருகின்றனர். 2.0 படம் தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத மைல்கல்.
இந்நிலையில் படத்தில் நடிகை எமிஜாக்சனின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இவரை தவிர வேறு யாராலும் இந்த அளவிற்கு இதில் நடித்திருக்க முடியுமா என்று தெரியவில்லை. சினிமா வசனங்கள், சீரியல் கதைகள் என அனைத்தையும் நினைவில் வைத்து அதுபோலவே எமிஜாக்சன் பேசி காண்பிப்பார். இது மிகவும் நகைச்சுவையாக இருக்கும். இந்நிலையில் எமிஜாக்சனுக்கு டப்பிங் பேசியது யார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல டப்பிங் கலைஞரான ஸ்ரீஜாவின் மகளான ரவீனா என்பவர் தானம். இவர் கடந்த ஆண்டு வித்தார்த் நடிப்பில் வெளியான ‘ஒருகிடாயின்கருணைமனு ‘என்ற படத்தில் கதாநாயகியாகி நடித்துள்ளார்.
தற்போது 25 வயது ஆகும் இவர், தனது மூன்று வயதிலேயே டப்பிங் பேச ஆரம்பித்த ரவீனா. மேலும், தமிழ் தெலுகு மலையாளம் என்று பல்வேறு விளம்பர படங்களுக்கு டப்பிங் பேசியுள்ளார். முதன் முதலில் 2012 ஆம் வெளியான ‘சாட்டை ‘ படத்தின் மூலமே தமிழ் சினிமாவில் டப்பிங் கலைஞராக தனது பயணத்தை துவங்கினார்.