×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தாய் முக்கியமா? தாரம் முக்கியமா? அப்போவே அஜித் சொன்ன அசத்தலான பதில்!

Who is important ajith answer in citizen movie

Advertisement

தமிழ் சினிமாவில் தனக்கென பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளவர் தல அஜித். எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல், தனது சொந்த முயற்சியாலும், திறமையாலும் எட்ட முடியாத உயரத்திற்கு வளர்ந்துள்ளார் தல அஜித். தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவான விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார் தல அஜித்.

விஸ்வாசம் படம் கடந்த ஜனவரி 10 அன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. விஸ்வாசம் படம் அஜித் ரசிகர்கள் மட்டும் இல்லாமல், குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக அமைந்துள்ளது.

விஸ்வாசம் படத்தை அடுத்து ஹிந்தியில் வெளியாகி வெற்றிபெற்ற பிங்க் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார் அஜித். வினோத் இந்த படத்தை இயக்குகிறார். அஜித் நடிப்பில் வெளியான படங்களில் பெரும்பாலான படங்கள் மாபெரும் வெற்றிபெற்றவை. அதில் ஒருசில படங்கள் இன்றுவரை மக்கள் நினைவில் மறக்கமுடியாத காவியங்களாக உள்ளன.

அந்தவகையில், அஜித் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் சிட்டிசன். மிகவும் வித்தியாசமான கதைக்களம் கொண்ட இந்த திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது.

சிட்டிசன் படத்தில் நடிகர் அஜித் ஒரு வழக்கறிஞராக காண்பிக்கப்பட்டிருப்பார். அப்போது, படத்தின் முதல் பகுதியில் சட்டம் சம்மந்தமான சந்தேகங்களுக்கு அஜித் பதிலளிப்பார். அப்போது ஒருவர், தாய் முக்கியமா? தாரம் முக்கியமா என கேள்வி கேட்பார். 

அதற்கு அஜித் மிக அழகாக பதில் அளித்திருப்பார். ஒரு தாரத்தில் தாயை பார்க்க முடியும். அதனால் தாரம்தான் முக்கியம் என பதிலளித்திருப்பார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Ajith Kumar #Citizen
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story