இதற்காகவா இப்படி ஒரு கொடூரம்!! அசந்து தூங்கிக் கொண்டிருந்த கணவர்.! அதிகாலையில் மனைவி செய்த காரியத்தால் துடிதுடித்துப்போன மகன்கள்!!
wife killed husband for property
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் வசித்து வந்தவர் பாக்கியராஜ். 68 வயது நிறைந்த இவர் வெளிநாட்டில் வேலை புரிந்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அங்கிருந்து வந்த தனியார் வங்கி ஒன்றில் இரவு நேர காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். மேலும் அவர் தற்போது உடல்நிலை சரியில்லாத நிலையில் வீட்டிலேயே தங்கி ஓய்வு எடுத்து வந்தார்.
இவரது மனைவி மரியலீலா இவர்களுக்கு அன்ன ஜூலியட், ஞானசெல்வி பிரகாசி என்ற இரு மகள்களும் சபரி ஆனந்த், டிகோ விக்டர் என்ற இரு மகன்களும் உள்ளனர். மகள்கள் திருமணமாகி கணவன் வீட்டுக்கு சென்ற நிலையில், மகன்கள் திருமணமாகி பாக்யராஜுக்கு சொந்தமான வீட்டின் மாடியில் ஒருவரும் கீழ் வீட்டில் ஒருவரும் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக 8 ஆண்டுகளாக பிரிந்து வாழும் மரியலீலா மற்றும் பாக்கியராஜ் இருவரும் அருகருகே தனித்தனி வீடுகளில் வசித்து வந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து பாக்கியராஜ் சமீபத்தில் தனது சொத்துக்களை இருமகன்களுக்கு பிரித்துக் கொடுக்க முடிவு செய்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மரியலீலா சொத்துக்கள் அனைத்தையும் தனது பெயரில் எழுதி வைக்குமாறு தகராறு செய்துள்ளார். அதனை பாக்யராஜ் பொருட்படுத்தாத நிலையில் ஆத்திரமடைந்த மரியலீலா தூங்கிக்கொண்டிருந்த கணவன் மீது மண்ணெண்ணையை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார்.
இந்நிலையில் உடல் எரிந்த நிலையில் பாக்கியராஜ் அலறுகிறார் இந்நிலையில் தந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த மகன்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர் ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதனை தொடர்ந்து இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மரியலீலாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.