பிக்பாஸ் சீசன் 3ல் பிரபல சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி கலந்துகொள்கிறாரா? எகிரும் எதிர்பார்ப்பு
Will srireddy particippate in bigboss 3
தெலுங்கு சினிமா உலகில் கவர்ச்சி நடிகையாய் அறிமுகமாகி இன்று சர்ச்சை நடிகை என பெயர் போன ஸ்ரீரெட்டி இந்த மாதம் துவங்கவுள்ள பிக்பாஸ் சீசன் 3ல் கலந்துகொள்வாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சினிமாத்துறையில் நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் என அனைவரும் பட வாய்ப்பு தருவதாக கூறி என்னை படுக்கைக்கு அழைத்து ஏமாற்றிவிட்டதாக அரை நிர்வாண போராட்டம் நடத்தி மக்களிடையே பிரபலமானவர் நடிகை ஸ்ரீரெட்டி.
மேலும் தெலுங்கு திரையுலகின் பல பெரும் புள்ளிகள் மீது பாலியல் குற்றம்சாட்டி பெரும் பரபரப்பை கிளப்பினார். பின்னர் இவரது பார்வை தமிழ் சினிமா பக்கம் திரும்பி பிரபல இயக்குனர் முருகதாஸ், சுந்தர் சி, ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த் என இவரது பாலியல் குற்றசாட்டுகள் நீண்டுகொண்டே போனது.
இந்நிலையில் தெலுங்கு பிக்பாஸ் சீசனில் நடிகை ஸ்ரீரெட்டி கலந்துகொள்ள ஆசைப்பட்டு தயாரிப்பு நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவரை சேர்த்துக்கொள்ள தயாரிப்பு நிறுவனம் உடன்படவில்லை.
இதனைத் தொடர்ந்து தமிழில் இந்த மாதம் துவங்கவுள்ள பிக்பாஸ் சீசன் 3ல் ஸ்ரீரெட்டி கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் போட்டியாளர்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகாத நிலையில், ஸ்ரீரெட்டி தமிழ் பிக்பாஸில் கலந்துகொள்வாரா என உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.
ஆனால் சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி தமிழ் பிக்பாஸில் கலந்துகொண்டால் அவரது உண்மை முகம் வெளிச்சத்திற்கு வரும் அல்லது பல சர்ச்சைகள் உருவாகி இந்த சீசன் விறுவிறுப்பாக இருக்கும் என்ற ஆவலில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.