×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அஜித் மற்றும் விஜய் ரசிகர்களின் சாதனையை முறியடித்த சூர்யா ரசிகர்கள்! உலகிலே உயரமான கட்டவுட்டின் சிறப்பம்சங்கள்

worlds largest cutout of surya for NGK

Advertisement

நடிகர் சூர்யாவின் படமான NGK வரும் மே 31 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் சூர்யாவின் திருவள்ளூர் மாவட்ட ரசிகர்கள் சூராவிற்கு 215 ஆதி உயர கட்டவுட்டினை வைத்து சாதனை படைத்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் நடிகர்கள் போட்டி போடுகிறார்களோ இல்லையோ, நடிகர்களின் ரசிகர்களுக்கு இடையே நாடாகும் போட்டிகள் பெருகி வருகின்றன. எம்ஜிஆர்-சிவாஜி, ரஜினி-கமல், அஜித்-விஜய் என காலம்காலமாக இவர்களின் ரசிகர்கள் செய்யும் செயல்கள் பலரையும் வியப்படைய வைத்துள்ளது.

இந்த காலகட்டத்தில் அஜித்-விஜய் ரசிகர்களையும் தாண்டி நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் புதிய சாதனை படைக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கி அதனை வெறும் காட்டியுள்ளனர். இதன்மூலம் சூர்யாவை அஜித் மற்றும் விஜய் அளவிற்கு உயர்த்தும் திட்டத்தில் சூர்யா ரசிகர்கள் வெற்றி அடைந்துள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும்.

மே 31 ஆம் தேதி சூர்யாவின் NGK திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சூர்யா ரசிகர்கள் திருத்தணியில் 215 அடி உயர கடவுட்டை சூர்யாவிற்கு வைத்துள்ளனர். இன்றைய நிலையில் உலக அளவில் மிக உயரமாக வைக்கப்பட்ட கடவுட் இதுவே என சூர்யா ரசிகர்கள் ட்விட்டரில்  #NGKWORLDsLargestCutout என்ற ஹாஸ் டேக்கினை இந்திய அளவில் ட்ரெண்ட் ஆக்கியுள்ளனர்.

இதற்கு முன் சர்கார் படத்துக்காக கேரளாவில் விஜய்க்கு 175 அடியில் வைக்கப்பட்ட கட்-அவுட்டும், அதனைத் தொடர்ந்து விஸ்வாசம் படத்துக்காக அஜித்துக்கு திண்டுக்கல்லில் 190 அடியில் வைக்கப்பட்ட கட்-அவுட்டும் தான் மிகப்பெரிய கட்-அவுட்டுகளாகும். இவற்றை விட உயரமாக வைக்க வேண்டும் என்று முடிவு செய்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கட்-அவுட் வேலை இன்று சிறப்பாக நடந்து முடிந்தது. இதன் உயரம் சுமார் 215 அடி என்று கூறப்படுகிறது. இதற்கான விழா நாளை மாலை 4 மணியளவில் கொண்டாடப்படுகிறது. 

இந்த கட்டவுட்டின் சிறப்பம்சம் என்னவெனில், வழக்கமாக கட்டவுட்கள் போல இந்த கட்டவுட் டிஜிட்டல் பிரின்டிங் செய்யப்படவில்லை. மாறாக முழுக்க முழுக்க கையால் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே மிக உயரமான கட்-அவுட் வைக்க வேண்டும் என்று முடிவு செய்து இந்த மாதம் 17-ஆம் தேதி திருவள்ளூர் சூர்யா ரசிகர் மன்றம் சார்பாக பூஜை போடப்பட்டு முழூவீச்சில் வேலைகள் நடந்தன. இதற்காக ஏழு லட்சம் வரை செலவு செய்துள்ளனர் சூர்யாவின் ரசிகர்கள்.



 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#NGK #ngk coutout #NGKINDIAsLargestCutout #NGKWORLDsLargestCutout #actor surya #surya fans
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story