சாதிவெறியர் பட்டம் பெறுவது எப்படி?.. ஸ்கெட்ச் போட்டு விளக்கிய எழுத்தாளர்.!
சாதிவெறியர் பட்டம் பெறுவது எப்படி?.. ஸ்கெட்ச் போட்டு விளக்கிய எழுத்தாளர்.!
தமிழ் திரையுலகில் பிரபலமாக இருந்த இயக்குனர் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகம் செய்யப்பட்டார்.
அதைத்தொடர்ந்து, தற்போது கர்ணன் திரைப்படத்திற்கு பின்னர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேல் ஆகியோரின் நடிப்பில் உருவான மாமன்னன் திரைப்படத்தை இயக்கி வழங்கியிருந்தார்.
இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்து கொடுத்திருந்தார். படத்தில் ஆதிக்க வர்க்கத்தினருக்கும் - தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் இடையேயான போராட்டமாக கதையம்சம் உள்ளன.
இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், எழுத்தாளரும் இயக்குனருமான லீனா மணிமேகலை மாமன்னன் திரைப்படம் குறித்தும், மாரி செல்வராஜ் குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார்.
அதாவது, பா. ரஞ்சித், மாரி செல்வராஜின் படங்களை விமர்சத்தால் சாதிவெறியர் பட்டம் பெற்றுவிடலாம். சினிமாவில் அனைத்தும் இலாப குறிக்கோளே" என தெரிவித்துள்ளார்.