உன்னை ரொம்ப மிஸ் செய்கிறேன்.. அழகிய புகைப்படங்களுடன் யாஷிகா வெளியிட்ட வேதனையான பதிவு!!
உன்னை ரொம்ப மிஸ் செய்கிறேன்.. அழகிய புகைப்படங்களுடன் யாஷிகா வெளியிட்ட வேதனையான பதிவு!!
தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா. அதனை தொடர்ந்து அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பெருமளவில் பிரபலமானார். பின்னர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அவர் தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார்.
இந்நிலையில் யாஷிகா கடந்த சில மாதங்களுக்கு முன்பு காரில் மாமல்லபுரத்தில் இருந்து சென்னைக்கு திரும்பிய போது சூலேரிக்காடு பகுதியில் பெரும் விபத்தில் சிக்கினார். இதில் அவர் பலத்த காயமடைந்தார். பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு பிறகு தற்போது மெல்ல குணமடைந்துள்ளார். மேலும் அந்த விபத்தில் யாஷிகாவின் உயிர்தோழியான வள்ளிஷெட்டி பவானி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா மறைந்த தனது தோழி பவானியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடன் எடுத்த அழகிய பல புகைப்படங்களை பகிர்ந்து, வேதனையுடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், உன் பிறந்தநாளன்று நீ இல்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் உனது சிரிப்பை, அழகிய முகத்தை மிஸ் செய்கிறேன். உன்னை நம்பிய அளவிற்கு நான் வேறு யாரையும் நம்பியதில்லை. தற்போது உனது குடும்பம் எவ்வளவு வேதனைப்படும் என்பதை கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை என தெரிவித்துள்ளார்.