மீண்டும் மாஸ்.. ஏண்டி விட்டு போன? STR குரலில் பாடல்.. டிராகன் படக்குழு தந்த சர்ப்ரைஸ்.!
மீண்டும் மாஸ்.. ஏண்டி விட்டு போன? STR குரலில் பாடல்.. டிராகன் படக்குழு தந்த சர்ப்ரைஸ்.!

அஸ்வந்த் இயக்கத்தில், லியோன் ஜேம்ஸ் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் உட்பட பலர் நடிக்க வெளியாகவுள்ள திரைப்படம் டிராகன் (Dragon Tamil Movie). பிரதீப் நடித்த லவ் டுடே திரைப்படம், இயக்கத்தில் வெளியாகிய கோமாளி திரைப்படம் நல்ல வெற்றியை அடைந்தது.
டிராகன் திரைப்படம்
அதனைத்தொடர்ந்து, தற்போது கல்பாத்தி ஏஜிஎஸ் கிரியேஷன் தயாரிப்பில் டிராகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். 2025 ம் ஆண்டு காதலர் தினம் பிப்ரவரி 14 அன்று கொண்டாடப்படவுள்ள நிலையில், அன்று பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள டிராகன் திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிரதீப் ரங்கநாதனின் டிராகன் திரைப்படம்; வெளியீடு தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
ஏண்டி விட்டு போன
இந்நிலையில், டிராகன் படத்தில் இடம்பெற்றுள்ள ஏண்டி விட்டு போன (Yendi Vittu Pona) என்ற பாடல், சிலம்பரசன் குரலில், கோ சேஷா வரிகளில் உருவாகி இருக்கிறது. இப்பாடலின் ப்ரோமோ தொடர்பான தகவலைத்தொடர்ந்து, சிலம்பரசன் பாடல் பாடி இருக்கிறது உறுதி செய்யப்பட்ட நிலையில், அதன் ப்ரோமோ வெளியாகியுள்ளது. பாடல் வரும் 28 ஜனவரி 2025 அன்று, இரவு 6 மணிக்கு வெளியாகிறது.
இதையும் படிங்க: சமூகத்தின் மீதான கவனத்தை பிரதிபலிக்கும் பேட் கேர்ள் டீசர்.. வீடியோ லிங்க் உள்ளே.!