மேடையிலேயே நடிகைக்கு க்யூட்டாக ப்ரொபோஸ் செய்த காமெடி நடிகர் யோகிபாபு!! தீயாய் பரவும் வீடியோ!
Yokibabu Nayanthara
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார் யோகி பாபு. சாதாரண ஒரு நடிகனாக சினிமாவில் அறிமுகமான இவர் நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு யாமிருக்க பயமேன் என்றே படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். அதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவருகிறார் யோகிபாபு.
மேலும், அஜித், விஜய் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் யோகி பாபு. அதுமட்டும் இல்லாமல் தனி ஒரு நடிகராகவும் ஒருசில படங்களில் நடித்துவருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் நடைப்பெற்ற ஜீ சினி விருதில் இவர் நடித்த கோமாளி படத்தின் சிறந்த நகைச்சுவை நடிகர் என்ற விருது வழங்கப்பட்டது. இந்த விருதை பெற்ற யோகி பாபுவிடம் அவரின் திருமணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர் பொண்ணுங்களை எல்லாம் நான் பாக்குறேன். ஆனா, பொண்ணு தான் என்ன பார்க்க மாட்டேங்குது என்று நகைச்சுவையாக கூறியுள்ளார். மேலும் தொகுப்பாளினி அர்ச்சனா யோகிபாபுவிடம் நயன்தாரா
கூட உங்கள் எதிரே தான் உட்கார்ந்து இருக்கிறார் என கூறினார்.
உடனே யோகி பாபு கட்டுனா அந்த பொண்ணுதான் கட்டுவேன். அந்த பெண்ணு யார் தெரியுமா? நீங்க தான் என்று கூற நயன்தாரா வெட்கத்தில் சிரிக்கும் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.