எவ்ளோ ஆசையா வந்தேன்! எப்படி இது நடந்துச்சு? ஓட்டு போட சென்ற இளைஞருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
திருச்சி உறையூரில் வாக்களிக்க வந்த இளைஞர் ஒருவர் தனது வாக்கு ஏற்கனவே பதிவாகி இருப்பதாக அதி
திருச்சி உறையூரில் வாக்களிக்க வந்த இளைஞர் ஒருவர் தனது வாக்கு ஏற்கனவே பதிவாகி இருப்பதாக அதிகாரிகள் கூறியதை கேட்டு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நேற்று காலை 7 மணி தொடங்கி மாலை 7மணி வரைக்கும் நடைபெற்றது. பொதுமக்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
இந்நிலையில் திருச்சி உறையூர் குறத்தெருவில் உள்ள வாக்குச்சாவடிக்கு உறையூர் செட்டித் தெருவைச் சேர்ந்த ஹரிஹரன் என்ற இளைஞர் வாக்களிக்க சென்றுள்ளார். அப்போது அங்கு பணியில் உள்ள அதிகாரிகள், உங்களது வாக்கு ஏற்கனவே பதிவாகியுள்ளது. நீங்கள் வாக்களிக்க முடியாது என்று கூறியுள்ளனர்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த இளைஞர் தான் இப்போதுதான் வீட்டிலிருந்து வருகிறேன். எனது ஓட்டு எப்படி பதிவாகியிருக்கும் என அங்கிருந்த அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இருந்தும் தன்னால் வாக்களிக்க முடியவில்லை. அதனால் தான் மன உளைச்சல் அடைந்ததாகவும் அந்த இளைஞர் கூறியுள்ளார். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.