"குழந்தையின் பாலினத்தை அறிவித்தது தவறுதான்" - பகிரங்க மன்னிப்புக்கேட்ட இர்பான்.!
குழந்தையின் பாலினத்தை அறிவித்தது தவறுதான் - பகிரங்க மன்னிப்புக்கேட்ட இர்பான்.!
யூடியூப் பக்கத்தில் உணவகங்களுக்கு சென்று உணவுகளை சாப்பிட்டு, அதன் ருசி, தரம் உட்பட பல்வேறு தகவல்கள் குறித்த காணொளிகளை பதிவு செய்து வந்தவர் இர்பான். இவருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, அவர் தற்போது மிகப்பிரபலமான நபர்களில் ஒருவராகவும் இருக்கிறார்.
கடந்த ஆண்டு அமெரிக்காவில் உள்ள நடிகர் நெப்போலியனின் வீட்டிற்கு சென்று வந்தவர், தொடர்ந்து தனது யூடியூப் பக்கத்தில் பல்வேறு விதமான வீடியோவை பதிவு செய்து வருகிறார். இவர் ஆசிபா நாசர் என்ற பெண்ணையும் திருமணம் செய்துகொண்ட நிலையில், தம்பதிகள் தற்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சிசுவின் பாலினத்தை அறிவித்த விவகாரம்... இர்ஃபான் எடுத்த அதிரடி முடிவு...
இர்பானின் மனைவி கர்ப்பம்
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக இர்பானின் மனைவி ஆசிபா கர்ப்பமான நிலையில், மனைவியை துபாய்க்கு அழைத்து சென்றவர் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்தார். பின் இந்தியாவுக்கு வந்து நிகழ்ச்சி ஒன்றை வீட்டில் ஏற்பாடு செய்தவர், குழந்தையின் பாலினத்தை அறிவித்து விடீயோவையும் வெளியிட்டார்.
குழந்தையின் பாலினத்தை அறிவித்ததால் சர்ச்சை
சிலமணிநேரத்தில் மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை பெற்ற அந்த வீடியோவில் குழந்தையின் பாலினத்தை வெளிப்படையாக தெரிவித்த காரணத்தால் அவரின் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இவ்வாறான செயல்கள் இந்திய அரசியலமைப்பு சட்டப்படி குற்றமாகவும் கருதப்படுகிறது.
இதனால் இர்பானிடம் விசாரணை நடத்த 3 மருத்துவர்கள் குழுவும் அமைக்கப்பட்ட நிலையில், தற்போது இர்பான் தனது செயல்பாட்டுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரியுள்ளார். மேலும், சுகாதாரத்துறை அதிகாரிகள் மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி வாயிலாக தொடர்புகொண்டு மன்னிப்பு கோரியுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கற்றது தமிழ் படத்தால் நஷ்டமானாலும், அந்த விஷயம் திருப்தி தந்தது - மனம் திறந்த நடிகர் கருணாஸ்.!