ஒரு இசையமைப்பாளருக்கு இவ்வளவு பேனரா! நடிகர்களை மிஞ்சிய யுவன் ரசிகர்கள்
yuvan sangar raja-ngk
தமிழ் சினிமாவில் நடிகர் ,நடிகைகளுக்கு மட்டும் பேனர் வைத்த நிலை மாறி இன்று இசையமைப்பாளர்களுக்கும் பேனர் வைக்க ஆரம்பித்து விட்டனர் ரசிகர்கள்.
அந்த வகையில் இசையமைப்பாளர் யுவன் சங்க ராஜாவும் ஒருவராவார் . யுவன் தமிழ் சினிமாவின் முன்னனி இசையமைப்பாளர். நடிகர்களுக்கு என்று எப்படி ரசிகர்கள் இருக்கிறார்களோ, அதேபோல் இசையமைப்பாளர்களில் யுவனுக்கு மிகப்பெரும் ரசிகர்கள் இருக்கின்றனர்.
ஒரு இசையமைப்பாளருக்கு இவ்வளவு பேனர் வைப்பது கடந்த சில வருடங்களில் இதுவே முதன் முறை என கூறப்படுகின்றது.
அந்த வகையில் இன்று இவர் இசையமைப்பில் என்ஜிகே படம் ரிலிஸாகியுள்ளது, இப்படத்தை பற்றி பல நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும், யுவனின் பின்னணி இசையே அனைவராலும் பாராட்டப்பட்டு வருகின்றது.
அந்த அளவிற்கு படத்தில் இவருடைய இசை பேசப்பட்டு வருகின்றது, இந்நிலையில் யுவனுக்கு தமிழகத்தில் பல இடங்களில் இன்று பேனர் வைத்துள்ளனர்.