இந்த தீபாவளிக்கு ஜீ தமிழில் என்ன படம் தெரியுமா? திரைக்கு வந்து சில வாரங்களே ஆன மெகாஹிட் படம்.
Zee tamil deepavali special movie nerkonta paarvai
இன்னும் ஓரிரு வாரங்களில் தீபாவளி வருவதை ஒட்டி இப்போதில் இருந்தே மக்கள் அதற்கு தயாராகிவருகின்றனர். தீபாவளி என்றாலே புது உடை, இனிப்பு, பட்டாசு மற்றும் திரைக்கு வரும் புது படங்கள் என மகிழ்ச்சிக்கு பஞ்சம் இருக்காது.
முன்பெல்லாம் பண்டிகை நாட்கள் என்றாலே தொலைக்காட்சியில் என்ன புது படம் போடுவார்கள் என்று மக்கள் ஆவலுடன் காத்திருப்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் அதிகப்படியான திரையரங்கங்கள், தொலைபேசி, அதிவேக இன்டர்நெட், புது புது செயலிகள் மூலம் படம் வெளியான சில நாட்களிலையே மக்கள் படத்தை பார்த்துவிடுகின்றனர்.
இதனால் பண்டிகை காலங்களில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் படங்களுக்கு வரவேற்பு குறைந்து வருகிறது. இருப்பினும் ஒருசில படங்களுக்கு இன்றுவரை நல்ல வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது. இந்நிலையில் இந்தவருட தீபாவளிக்கு எந்த தொலைக்காட்சியில் எந்த படம் என தெரிந்துகொள்ள மக்கள் ஆவலுடன் உள்ளனர்.
அந்த வகையில் இந்த தீபாவளி அன்று ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தல அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.