கொரோனவால் உயிரிழந்த நபர்.! அவரது செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தியை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்.!
கொரோனவால் உயிரிழந்த நபர்.! அவரது செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தியை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்.!
உலகத்தையே அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி அடுத்தடுத்த அலைகளாக நீடித்து வந்தது. இந்தியாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு நீடித்து வருகிறது. இந்நிலையில் மக்களை கொரோனாவிலிருந்து காக்க தடுப்பூசி செலுத்தும் பணிகள் மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தடுப்பூசி பலரும் செலுத்தியபிறகு தற்போது நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இந்தநிலையில், திருச்சி உறையூர் பகுதியில் வசித்து வந்த செல்வராஜ் என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டார்.
தடுப்பூசி செலுத்தி கொண்ட சில நாட்களிலே அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது குடும்பத்தினர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த மே மாதம் உயிரிழந்துள்ளார் செல்வராஜ்.
இந்நிலையில் தற்போது செல்வராஜ் இரண்டாவது தடுப்பூசி செலுத்தி கொண்டதாக அவர் பயன்படுத்தி வந்த செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. இதனால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதில் எங்கே தவறு நடந்தது என்று விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.