×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தீபாவளியை மேலும் சுவைக்கூட்டும் பாம்பே அல்வா செய்வது எப்படி?

How to prepare vegitable bomapay halwa

Advertisement

தீபாவளி என்றாலே நமது மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு பண்டிகை. புத்தாடை, பட்டாசு, புது திரைப்படம் என அன்றைய நாள் முழுவதும் சந்தோஷத்தில் நிறைந்திருக்கும். வரும் நவம்பர் 6 தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது.  மேலும் தீபாவளியில் முக்கிய பங்கு வகிப்பது தீபாவளிக்கு செய்யப்படும் பலகாரங்கள் ஆகும்.  அந்த வகையில் சுவையான "பாம்பே அல்வா"  செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க.

தேவையான பொருட்கள்: 

காய்கறி - அரை கப் ( பீட்ரூட், கேரட், பீன்ஸ், மஞ்சள் பூசணி அனைத்தையும் ஆவியில் வேகவைத்து நன்கு அரைத்து கொள்ளவும்.)
 
 சோள  மாவு -அரை கப், 

சர்க்கரை - 2 கப், 

நெய் - அரை கப், 

பாதாம்,முந்திரி, 

வெள்ளரி விதை (உடைத்தது) -   கால் கப், 

வெனிலா எசன்ஸ் - அரை டீஸ்பூன், தண்ணீர் - 3 கப்.

செய்முறை: 

முதலில், தூய்மையான பாத்திரத்தில் காய்கறி விழுது, சோள மாவு,  தண்ணீர், சர்க்கரை ஆகிய அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் கட்டியாக  இல்லாமல் நன்கு கலக்கவும். பாத்திரத்தை அடுப்பில் வைத்த உடன் மிதமான தீயில் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். 

இந்த கலவை சற்று, நிறம் மாறியதும் தீயை இன்னும் குறைத்து, அவ்வப்போது லேசாக  நெய் சேர்த்துக் கைவிடாமல் கிளறவும்.பாத்திரத்தில் ஒட்டாத பதம் வந்ததும் நெய்யில் பொரித்த முந்திரி, பாதாம், வெள்ளரி விதை  சேர்த்துக் கிளறவும். கடைசியாக வெனிலா எசன்ஸ் சேர்த்துக் கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டி, சமப்படுத்தி, நன்கு ஆறவிட்டு, துண்டுகள் போட்டு பரிமாறவும். அவ்வளவு தான் "சுவையான வெஜிடபிள் பாம்பே அல்வா" ரெடி.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Halwa #Deepavali food #Deepavali #Receipies
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story