×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பணம் என்னடா பணம்.இவ்வளவு தான் வாழ்க்கையா?

money is not important

Advertisement

’ஆப்பிள்’ உலகின் மிகப்பெரிய பிரபலமான நிறுவனமாக தொடர்ந்து இருந்து வருகிறது. இதன் பின்னணியில் இருந்த  ஸ்டீவ் ஜாப்ஸ் உலமெங்கும் பலரால் விரும்பப்பட்டவராக, கணினித் துறையில் அவர் செய்த புரட்சிகளுக்காக போற்றப்படுவராக இருந்து வருகிறார். அவர் கண்ட கனவும் அதற்காக அவர் எடுத்த முயற்சிகளும் பிரம்மிக்கவைப்பவை. ஸ்டீவ் ஜாப்ஸ், ஒரு தொழில்முனைவராக, கண்டுபிடிப்பாளராக, தொழில்நுட்பத்தில் கடவுளாக பார்க்கப்படுகிறார். 


தன்னுடைய இளமைப் பருவத்தில் ஒரு புத்தத் துறவியாக ஆக நினைத்தார் ஸ்டீவ். 1974-ல், இந்தியா வந்திருந்த அவருக்கு புத்தமதம் மீது ஆர்வம் பெருகி இந்த முடிவு எடுக்க நினைத்திருந்தார். அம்மதத்தின் மீதான ஈர்ப்பு அவருக்கு இறுதிவரை இருந்தது குறிப்பிடத்தக்கது. 
ஸ்டீவ் ஜாப்ஸ் பெஸ்டேரியனாக அதாவது, இறைச்சியில் மீன் மட்டும் உட்கொள்வது மற்றபடி சைவமாக இருந்தார். அவர் விரும்பி சாப்பிடும் உணவு மீன்கள். அதே சமயம், கேரட் மற்றும் பழங்களை விரும்பி சாப்பிடுவார். எல்லாவித காய்கறிகளையும், தானியங்களையும் உட்கொள்வார் ஸ்டீவ். 
ஸ்டீவ், ரீட்ஸ் கல்லூரியில் 18 மாதம் படித்துவிட்டு இடைநிற்றல் செய்தார். கல்லூரியில் அவருக்கு பிடித்த ஒரே வகுப்பு காலிக்ராபி எனப்படும் கலைநயத்தோடு எழுத்துக்களை எழுத கற்றுத்தரும் வகுப்புகள். அந்த வகுப்புகளில் கலந்துகொண்டதன் மூலமே ஆப்பிள் தயாரிப்புகளில் விதவிதமான ஃபாண்ட்’களை அறிமுகப்படுத்தினார் ஜாப்ஸ்

ஸ்டீவ் ஜாப்ஸ் தன் நிறுவனத்துக்கு ‘ஆப்பிள்’ என்று பெயரிட்டதன் காரணத்தை பலரும் விவாதித்துள்ளனர். பழங்கள் விரும்பியான ஸ்டீவ் அடிக்கடி ஆர்கானிக் பழங்கள் விளையும் நிலங்களுக்கு செல்லும் போது மனதில் தோன்றிய பெயரே ஆப்பிள் என்று கூறப்படுகிறது. 


உலகமே வியந்து பொறாமைப்பட்ட ,உச்சமான  நிலையை தொட்ட ஆப்பிள் நிறுவனத்தின் ஆதிபர் ஸ்டீவ் ஜாப்ஸ் உடல்நலம் குன்றி தனது 56வது வயதில்  உலகை பிரிவதற்கு முன்பு சொன்ன செய்தி 
வர்த்தகம் வாழ்வில்  உச்சம் தொட்டேன் வாழ்க்கையில் தோற்று விட்டேன் என்று ஸ்டீவ் ஜாப்ஸ் இறப்பதற்கு முன் கூறினார்.அவர் இறப்பதற்கு முன் உச்சரித்த அந்த ஒற்றை வார்த்தையின் அர்த்தம் இதுவரை யாருக்கும் புலப்படவில்லை. அவர் சொன்ன, “ஓஹ் வாவ்...” “Oh wow. Oh wow. Oh wow” என்பதற்கு பின்னால் இருந்த உண்மை காரணம் மர்மமாகவே உள்ளது. அவர் எதைக் குறிப்பிட்டு இவ்வார்த்தைகளை உச்சரித்தார் என்று தெரியவில்லை.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#steve #money
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story