இந்தியாவில் 12 சதவீதம் பேருக்கு இந்த நோய் இருக்காம்.? சம அளவில் இருக்கும் பெண்கள்! அதிர்ச்சி ரிப்போர்ட்.
12 percentage of indian people affected by diabetes
நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் மனிதனின் உணவு பழக்கவழக்கம் பெரிய அளவில் மாறிவிட்டது. இதன் விளைவாக பல்வேறு வியாதிகள் நம்மை தாக்கும் அபாயம் அதிகரித்துள்ளது. இதுபோன்ற வியாதிகளில் ஒன்றுதான் சர்க்கரை வியாதி என்று கூறப்படும் நீரிழிவு நோய்.
மற்ற வியாதிகள் போல உடனே பாதிப்பை ஏற்படுத்தாமல் நமது உடலின் உள்ளிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு உறுப்பையும் செயலிழக்க செய்யும். இந்நிலையில், சமீபத்தில் வெளியாகியுள்ள ஆய்வு முடிவு ஓன்று இந்தியர்களில் 12 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய் இருப்பதாகவும் அதிலும் 50 வயதை கடந்தவர்களே இதில் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறுகிறது.
டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவில் மற்றுமொரு அதிர்ச்சியும் காத்திருக்கிறது. அதாவது, ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம அளவில் சர்க்கரை நோய் இருப்பதாக தெரிய வந்துள்ளது.