ஆபத்தை தரும், தொடர் இருமல்.. புற்றுநோய் அபாயம்.. உஷார்.. இல்லன்னா உயிருக்கே ஆபத்து.!
ஆபத்தை விளைவிக்கும் இருமல்..! தொடர் இருமல் புற்றுநோயில் கொண்டு போய் விடும் எச்சரிக்கை..!
இருமல் பொதுவாக நிமோனியா தொற்று காரணமாக வருகிறது. இது வறட்டு இருமல் மற்றும் மஞ்சள் அல்லது இரத்தம் கலந்த சளியுடன் கூடிய இருமலை ஏற்படுத்தும். இதுவே, தொடர் இருமலாக மாறினால் தாமதிக்காமல் உடனே மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். ஆபத்தை விளைவிக்கும் தொடர் இருமல் வேறு என்ன என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்று இந்த பதிவில் பார்ப்போம்.
நுரையீரலை பாதிக்கும் :
புகைப் பிடிக்கும் பழக்கம் இருந்தால் அதை விட்டு விடுங்கள். தொடர்ந்து புகை பிடிப்பதால் முதலில் சாதாரண இருமலை உண்டாக்கும். பிறகு, அது தொடர் இருமலாக மாறும். இப்படியே தொடர்ந்தால் நுரையீரலை பாதித்து புற்றுநோய் வரை கொண்டு போய் விடும். புகைப் பிடிப்பதால் உங்கள் உடல் பாதிப்பதோடு உங்களை சேர்ந்தவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.
இதையும் படிங்க: மூட்டு வலிக்கு பற்கள் கூட காரணமாக இருக்குமா.?! எப்படி தெரியுமா.?! உஷார்.!
காசநோய் பாதிப்பு :
இருமல் 6 அல்லது 8 வாரங்களுக்கு மேல் அதிகரித்தால் அது காசநோயின் அறிகுறியாக இருக்க வாய்ப்பு உள்ளது. மேலும், ஆஸ்துமா நோய் கூட முதலில் இருமலிலிருந்து தான் தொடங்கும். ஆகையால், தொடர் இருமல் இருந்தால் அதை அலட்சியம் செய்ய வேண்டாம்.
மூச்சுக்குழாயில் அழற்சி :
மூச்சுக்குழாயில் அழற்சி இருப்பவர்களுக்கு இருமல் வரும். இந்த இருமலின் போது சளியுடன் கூடிய இருமலை ஏற்படுத்தும். அதுமட்டுமல்லாமல் கோவிட்-19 தொற்று வறட்டு இருமலை ஏற்படுத்தும் என சுகாதார நிபுணர்கள் தெளிவு படுத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிட தக்கது.
இருமல் வந்தால் மிளகு, துளசி, மஞ்சள் சேர்த்து கஷாயம் வைத்து குடிப்பது நல்லது. தொடர் இருமல் இருந்தால் அவசியம் மருத்துவரை அணுக வேண்டும்.
இதையும் படிங்க: காய்ச்சல், சளிக்கு கபசுரக்குடிநீர்..! யாரெல்லாம் இதை குடிக்க கூடாது.. தெரியுமா.?!