நாள்பட்ட நெஞ்சு சளி, வறட்டு இருமலை விரட்ட, சிறந்த பானம்.! உடனே குணமாகும்.!
சிரமம் தரும் சளி, இருமலை விரட்ட சிற்றத்தை மூலிகை பானம்... மருத்துவர் கூறிய அட்டகாசமான குறிப்பு..!
நாள்பட்ட சளி மற்றும் இருமலை சரி செய்வது மிகவும் கடினம். மேலும் சளி, இருமல் பிரச்சனை இருந்தால் சரியாக தூங்க முடியாது. இதனால் தலை வலி ஏற்படும். இதனை சரி செய்ய ஒரு அருமையான மூலிகை பானம் உண்டு. அந்த மூலிகை பானத்தை எப்படி செய்வது என்று இந்த பதிவில் காணலாம்.
தேவையானப் பொருட்கள் :
சிற்றத்தை - 1 ( சிறிய துண்டு )
தண்ணீர் - 1 கப்
செய்முறை :
முதலில் அடுப்பைப் பற்ற வைத்து ஒரு பாத்திரத்தை வைக்க வேண்டும். பிறகு அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். பின்பு அந்த சூடான நீரில் சிற்றத்தை 1 சிறிய துண்டு இடித்து சேர்த்து ஊற வைக்க வேண்டும். பிறகு வடிகட்டி மிதமான சூட்டில் இந்த பானத்தை பருகி வந்தால் சளி, இருமல், கபம் என அனைத்து பிரச்சனையும் சரி ஆகிவிடும்.
இதையும் படிங்க: சிறுநீரக நன்மைக்காக நாம் செய்ய வேண்டியது என்ன? அசத்தல் டிப்ஸ் இதோ.!
சிற்றத்தை மூலிகை பானத்தின் பயன்கள் :
இந்த சிற்றத்தை பார்ப்பதற்கு இஞ்சி போன்ற வடிவத்தில் இருக்கும். மேலும், இதில் சிற்றத்தை, பேரத்தை என இரு வகைகள் உண்டு.
இதன், சுவை காரத்தன்மை கொண்டது. இந்த பானத்தை குடிக்க அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு சிற்றத்தையை சிறிது எடுத்து இடித்து அதோடு தேன் கலந்து ஒரு ஸ்பூன் கொடுக்கலாம். மேலும் இந்த சிற்றத்தை அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.
இந்த மூலிகை சளி, இருமல் பிரச்சனையை சரி செய்வதோடு, புற்றுநோய் வராமல் தடுக்கும். குறிப்பாக மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கும். மேலும், தொற்று மற்றும் வீக்கத்தை குறைக்கும். சிற்றத்தை மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.
உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் குறைக்க சிற்றத்தை உதவுகிறது. மேலும், பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளையும் குணப்படுத்தும். சொத்தை பல் வலி, வீக்கம் ஆகியவற்றை இது சரி செய்யும்.
குறிப்பு :
இந்த மூலிகை பானம் ஒரு வீட்டு வைத்தியம். இதனை குடிக்கும் முன்பு சர்க்கரை நோய் அல்லது வேறு வியாதிகளுக்கு மருந்து எடுத்து கொள்பவர்கள் தங்களது மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.