குழந்தை பிறந்த பின், முதுகு வலியால் அவதியா.?! தாய்மார்கள் கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க.!
குழந்தை பிறந்த பின், முதுகு வலியால் அவதியா.?! தாய்மார்கள் கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க.!
குழந்தை பிறந்த பின் அதிகப்படியான பெண்கள் முதுகு வலி காரணமாக அவதிப்பட்டு வருகின்றனர். அதிலும் சிசேரியன் மூலம் குழந்தை பெற்று எடுத்தவர்களுக்கு முதுகு வலி அதிகமாக இருக்கும். சிசேரியன் செய்வதற்கு முன் அவர்களுக்கு முதுகில் போடப்படும் மயக்க ஊசி தான் காரணம் என்று பலரும் கூறுகின்றனர். இதனால் ஏற்படும் முதுகு வலியை எப்படி சரி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
கர்ப்பமாக இருக்கும் போது ஊட்டச்சத்து மிக்க உணவுகளை சாப்பிட்டாலும் குழந்தை பிறந்த பெண் அதிக ரத்தப்போக்கு ஏற்படுவதால் உடலில் பல சத்துக்கள் உறிஞ்சப்படுகின்றது.
சிசேரியன் சமயத்தில் பெண்களுக்கு மயக்க ஊசி செலுத்தப்படும். இது பிரசவத்திற்கு பின் அந்த பெண்களுக்கு முதுகெலும்பு மற்றும் தசை பகுதிகளில் இறுக்கத்தை ஏற்படுத்துவதால் அவர்களுக்கு முதுகு வலி அதிகமாக இருக்கும். அதிகப்படியானவருக்கு குழந்தை பிறந்த பெண் கழுத்து வலி, இடுப்பு வலி, அடிக்கடி தலைவலி உள்ளிட்ட பிரச்சனைகள் இருக்கும். இதற்கும் முதுகில் போடப்படும் அந்த மயக்க ஊசி தான் காரணம்.
இதற்கு தீர்வு, கர்ப்பமாக இருக்கும் போது ஒரு பெண்ணிற்கு எந்த அளவு கவனிப்பு தேவைப்படுகிறதோ அதே அளவிற்கு பிரசவத்திற்கு பின்னரும் அவருக்கு தேவை. குழந்தை பிறந்த பின்னர் தாயை கவனித்துக் கொள்ளாமல் இருப்பதால் அவருக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நிறைய பாதிப்புகள் ஏற்படுகின்றது.
அதிலும் தாய்மார்களுக்கு அதிக அளவு ஊட்டச்சத்து மிக்க உணவுகளை கொடுக்க வேண்டும். பால் ஊட்டுகின்ற தாய்மார்கள் மருத்துவர் கொடுக்கும் விட்டமின் மற்றும் இரும்பு சத்து மாத்திரைகளை தவறாமல் சாப்பிட வேண்டும்.
மேலும் எலும்பை பலப்படுத்த கால்சியம் சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். முதுகு வலையில் இருந்து தப்பிக்க கால்சியம் சத்துள்ள உணவுகளை சாப்பிடுவது அவசியம். சூடான நீரில் குளிப்பதும், குழந்தைகளுக்கு பாலூட்டும் போது வளைந்து கொடுக்காமல் நேரான பொசிஷனில் உட்கார்ந்து கொடுப்பதும் அவசியம். உயரமான தலகாணி இல்லாமல் படுப்பது முதுகு வலியை தவிர்க்க உதவும்.