ஜாக்கிரதை.. நாய்கடித்து 8 ஆண்டுகள் வரை உடலுக்குள்ளே வாழும் ரேபிஸ் வைரஸ்.. உயிரேபோகும் அபாயம்..!!
ஜாக்கிரதை.. நாய்கடித்து 8 ஆண்டுகள் வரை உடலுக்குள்ளே வாழும் ரேபிஸ் வைரஸ்.. அறிகுறி குறித்து தெரிஞ்சுக்கோங்க..! உயிரேப்போகும் அபாயம்..!!
நாய்கடியால் ஏற்படும் பாதிப்பாக ரேபிஸ் வைரஸ் பார்க்கப்படுகிறது. அதற்கான அறிகுறிகள் குறித்து தற்போது காணலாம்.
ரேபிஸ் என்று சொல்லப்படும் வெறிநாய்க்கடி வைரஸ்தொற்று என்றாலும் உலகளவில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இத்தோற்றால் உயிரிழக்கின்றனர். உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைபடி 2007-ஆம் ஆண்டிலிருந்து ரேபிஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் அதை எளிதாக எடுத்துக் கொள்கின்றனர்.
மேலும் ரேபிஸ் குறித்த தவறான புரிதலும், அதற்கான விழிப்புணர்வு இன்மையும் பல நோய்களுக்கு வழிவகை செய்கிறது. வீட்டில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளான நாய், பூனைகள் மனிதனின் முகம் மற்றும் கைகளை நக்கும்பழக்கம் கொண்டது. குறிப்பாக காயங்கள் இருக்கும் இடத்தில் செல்லபிராணிகள் நக்கும்போது, வைரஸ் நேரடியாக மனிதரின் ரத்தத்தில் கலக்கும்.
செல்லபிராணியுடன் விளையாடும்போது அதன் நகங்கள் மற்றும் பற்கள் மூலமாக கீரல் ஏற்படுவது இயல்பு. சிலர் இதனை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். ஆனால் இந்த வைரஸ்கள் மூளைக்கு சென்று நரம்புமண்டலத்தை சிறிது சிறிதாக தாக்குகிறது. இறுதியில் மரணமும் ஏற்படுகிறது.
சென்னையில் கடந்த 8 வருடங்களுக்கு முன்னதாக நாய்க்கடி ஏற்பட்ட 14 வயது நபருக்கு கடந்த ஆண்டின் துவக்கத்தில் அதிவேகத்தன்மை, உற்சாகமான நடத்தை, ஹைட்ரோஃபோபியா போன்ற அறிகுறிகள் தென்பட்டுள்ளன. இறுதியில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்துள்ளார். மூளைக்குச் செல்லும் நாய் கடித்ததற்கான அறிகுறி வார கணக்கிலும், மாத கணக்கிலும் இருக்கலாம்.
நாய் கடித்தால் ஏற்படும் அறிகுறியாக பலவீனத்துடன் கூடிய காய்ச்சல், தலைவலி, அடிபட்ட இடத்தில் குத்துவது போன்ற உணர்வு ஏற்படும் அல்லது அரிப்பது, சில நாட்களுக்கு பின்னர் பெருமூளை செயலிழப்பது, பதற்றம், குழப்பம், ஒரு விதமான கிளர்ச்சி போன்றவை இருக்கும்.
நாட்கள் செல்ல செல்ல சித்த பிரம்மை, நடத்தையில் மாற்றம், ஜன்னி, மயக்கம், தண்ணீர் குறித்த பயம், தூக்கமின்மை போன்றவையும் ஏற்படும். இந்த நோயின் கடுமையான காலம் 2 நாட்கள் முதல் 10 நாட்கள் போல் முடிவடையும். எனவே ஜாக்கிரதையாக இருங்கள்.