அச்சச்சோ.. பேராபத்து.. காற்றில் உள்ள நச்சுக்களால் சிறுநீரக பாதிப்பு.. ஆய்வாளர்கள் எச்சரிக்கை.!
அச்சச்சோ.. பேராபத்து.. காற்றில் உள்ள நச்சுக்களால் சிறுநீரக பாதிப்பு.. ஆய்வாளர்கள் எச்சரிக்கை.!
மாசுபாடுள்ள காற்றினை சுவாசித்தால், அதில் இருக்கும் நச்சுக்கள் சிறுநீரகத்திற்கு நேரடி தீங்கு விளைவிக்கும் என ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன. அமெரிக்காவில் உள்ள மிக்சிகன் பல்கலை., நடத்திய ஆய்வில் இந்த பிரச்சனை தெரியவந்துள்ளது.
கண்களுக்கு தெரியாத மாசு பெரும்பாலும் மக்களால் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. மாசு அதிகளவு நிறைந்துள்ள இடங்களில் பயணம் செய்கையில் முகத்தை மூடுவது மிகவும் அவசியமானது. நீண்ட தூர பயணத்தை மேற்கொள்பவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும்.
நாம் சுவாசிக்கும் காற்றில் இருக்கும் நச்சுக்கள், நமது உடல் இரத்தத்தில் கலந்து பாதிப்பினை ஏற்படுத்துகிறது. சிறுநீரகத்தின் செயல்பாடு இரத்த ஓட்டத்தினை மையப்படுத்தி நடக்கிறது. இரத்த ஓட்ட சுழற்சியில் மாசுகளால் ஏற்படும் பாதிப்பு, சிறுநீரகத்தை பாதிக்கிறது.
இதனால் உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், இருதய நோய் போன்றவையும் ஏற்படும். உலகளவில் காற்று மாசுள்ள நகரங்களின் பட்டியலில் இந்தியாவில் 14 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. அவையாவது டெல்லி, கான்பூர், லக்னோ, பாட்னா, ஆக்ரா, ஸ்ரீநகர், ஜெய்ப்பூர், கயா, வாரணாசி உட்பட 14 நகரங்கள் கூறப்பட்டுள்ளன.