காரசாரமான மிளகாயில் இப்படியான நன்மையா?.. தெரிஞ்சுக்கோங்க அசந்துபோவீங்க.!
காரசாரமான மிளகாயில் இப்படியான நன்மையா?.. தெரிஞ்சுக்கோங்க அசந்துபோவீங்க.!
நமது இந்திய உணவுகளில் காரசாரமான சுவைக்கு பெரிதும் உதவுவது மிளகாய். இது ஊசி மிளகாய், குண்டு மிளகாய், குடை மிளகாய் என 3 வகையாக நமக்கு கிடைக்கிறது. இவற்றில் உள்ள காரத்தன்மை காரணமாக இது வேறுபடுகிறது. குடைமிளகாய் என்பது இயல்பிலேயே காரத்தன்மை குறைந்தது ஆகும். இது சமையலுக்கும், விதைகள் நறுமண பொருளுக்கும், மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.
மிளகாயில் ஒலியோரெசின், காப்சைசின், கரோடினாய்ட்டுகள், பிளேவனாயிடுகள், எண்ணெய், ஸ்டெரெயிடல், சபோனின், கெப்சைசிடின்ஸ் போன்றவை உள்ளது.
மிளகாய் ஜீரணத்தை ஊக்குவிக்கிறது. தசைக்குடைச்சல் வழியை போக்குகிறது. கிருமி நாசினியாக செயல்படுகிறது. வியர்வை மற்றும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. வலியை போக்கும் மருத்துவத்தில் உதவி சேகரித்து.
உடலுக்கு வெப்பத்தினை வழங்கி, இரத்த ஓட்டத்தினை அதிகரிக்க உதவி செய்கிறது. கை, கால், உடலின் பிற பகுதிகளின் இரத்தம் சீர் செய்யப்படுகிறது. தோல் வியாதியான சொரியாசிஸ், நியூரால்ஜியா மற்றும் தலைவலி போன்றவற்றை குணப்படுத்தக்கூடியது.
பாக்டீரியாவிற்கு எதிராக செயல்புரிந்து உடலை பாதுகாக்கிறது. வயிற்று வலி, வாயு பிரச்சனைகளை சரி செய்கிறது. ஜீரண சுரப்பிகளை தூண்டி, ஜீரணம் செய்ய உதவுகிறது. புற்றுநோய் செல்களை அளிக்கும் சக்தியும் மிளகாய்க்கு உண்டு.
மிளகாயை அளவுடன் மட்டுமே உணவில் சேர்த்து சாப்பிட வேண்டும். அளவுக்கு மிஞ்சினால் அது பெரும் ஆபத்தில் முடிந்துவிடும்.