அடேங்கப்பா.. தினமும் தேங்காய் தண்ணீர் குடித்தால் இவ்வுளவு நன்மைகளா?.. மக்களே அசத்தல் டிப்ஸ் இதோ.!
அடேங்கப்பா.. தினமும் தேங்காய் தண்ணீர் குடித்தால் இவ்வுளவு நன்மைகளா?.. மக்களே அசத்தல் டிப்ஸ் இதோ.!
சமையல் அறையில் தேங்காய் உடைக்கும் சத்தம் கேட்டதும் கிளாஸை தூக்கிக்கொண்டு தேங்காய் நீர் பிடிக்க ஓடோடி செல்பவராக இருந்தால், உங்களின் உடல்நலம் எப்படியெல்லாம் முன்னேற்றம் அடைந்திருக்கும் என்பதை புரிந்துகொண்டு இனி ஆசையாக ஓடுங்கள்.
நாம் உச்சிவெயில் மண்டையை காயவைக்கும் சமயத்திலும், கோடைகாலங்களில் அதிகமாகவும் குடிக்கும் பானம் இளநீர். இயற்கையாக தென்னை மரங்களில் இருந்து கிடைக்கும் இளநீரை, வெயிலின் தாக்கத்தில் இருந்து விடுபட்டு உடலை பாதுகாக்க நாம் வாங்கி குடிப்போம். அதன் நன்மைகளும் நமக்கு தெரியும்.
ஆனால், இளநீரை தேங்காயாக உரித்து வந்ததும், அதில் இருந்து கிடைக்கும் நீரின் நன்மை குறித்து நீங்கள் அறிந்தது உண்டா?. அதன் யானைகள் தொடர்பான தகவலை பெற ஆர்வப்பட்டது உண்டா?. இன்றும் பலருக்கு சமையல் அறையில் தேங்காய் உடைக்கும் போது, அதன் நீரை குடிக்க பிடிக்கும். தேங்காய் நீர் நன்மை குறித்து இன்று தெரிந்துகொள்ளலாம்.
தேங்காய் தண்ணீர் நமது உடலை சுத்தம் செய்யும் பானங்களில் சிறப்பு மிகுந்தது ஆகும். தேங்காய் நீரை வாரத்தின் ஏழு நாட்கள் தொடர்ந்து குடித்து வர, உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். நமது நோயெதிர்ப்பு மண்டலம் வலிமை அடையும். ஈறுகள் தொடர்பான பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தால், அதனை சரி செய்யும்.
காய்ச்சல், சளி, இருமல் போன்றவற்றை உருவாக்கும் பாக்டீரியாக்கள், வைரஸ்களை அழித்து நமது உடலை பாதுகாக்கும். தைராய்டு பிரச்சனை இருப்பார்கள் தேங்காய் நீரை குடிக்கலாம். இதனால் உடலின் ஆற்றல் அதிகரிக்கும். தேங்காய் நீர் தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரித்து, அதன் சுரப்பியை செயல்பட வைக்கும்.
நமது சிறுநீர் பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றுகள் சரியாகும். சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டு. சிறுநீரகத்தில் கற்கள் தொடர்பான பிரச்சனை இருந்தால், அதற்கு தேங்காய் நீர் நல்ல பலனை தரும். தேங்காய் நீரில் இருக்கும் நார்சத்து, செரிமான பிரச்சனைகளை சரி செய்து, வாயுத்தொல்லையை கட்டுப்படுத்தும்.
அதேபோல, உடலில் தங்கியுள்ள தேவையற்ற கொழுப்புகளை உடலில் இருந்து கரைத்து வெளியேற்றி, உடல் எடை குறைப்புக்கு வழிவகை செய்யும். இரத்த அழுத்தம் இருக்கும் நபர்கள், தினமும் காலையில் தேங்காய் நீர் குடித்து வர, இரத்த அழுத்தம் கட்டுக்குள் கொண்டு வரப்படும்.
மதுபானம் அருந்துவது வீட்டிற்கு, நாட்டிற்கு, உடலுக்கு கேடு.. அது உயிரை கொல்லும்.. (Consumption of Alcohol is Injurious to Your Life, Health, Future.. It Kills..)
குடிகாரர்கள் இரவு நேரத்தில் அளவுக்கு அதிகமாக மதுபானம் அருந்திவிட்டு, மறுநாள் காலையில் எழுந்ததும் கடுமையான தலைவலியை உணருவார்கள். இதற்கு தேங்காய் நீர் நல்ல பலனை தரும். குடிகாரர்கள் மறுநாள் காலையில் தலைவலியை உணர்ந்தால் சிறிதளவு தேங்காய் நீர் குடிக்கலாம்.
இதனால் தலைவலி நீங்குவதோடு மட்டுமல்லாது, ஆல்கஹாலினால் உடல் சந்தித்த வறட்சி சரி செய்யப்படும். காலை நேரங்களில் தேங்காய் நீர் குடித்து வந்தால் உடலின் வறட்சி பிரச்சனை சரி செய்யப்பட்டு, நீர்சத்து அதிகரிக்கப்படும். அந்நாளில் பொலிவான தோற்றத்தையும், உடல் ஆற்றலையும் பெறலாம்..
குறிப்பு: தேங்காய் தண்ணீர் குடித்தால் சளி பிடிக்கும் பிரச்சனை உள்ளவர்கள், மதிய வேளையில் அதனை குடிக்கலாம். மாறாக காலை நேரத்தில் உடலை வருத்தி தேங்காய் தண்ணீர் குடிப்பது உங்களுக்கு நல்லதல்ல. அதேபோல, தேங்காய் நீர் என்பதை அளவோடு குடிப்பதே நல்லது. ஆர்வமிகுதியில் 3 & 4 தேங்காயை உடைத்து ஒரேநாளில் குடிப்பது உங்களின் உடலுக்கு நீங்கள் வைத்துக்கொள்ளும் ஆப்பு என்பதையும் மறக்க வேண்டாம்.