இந்த மீன்களை சாப்பிட்டால், மரணம் கூட தள்ளிப் போகும்.! ஏன் தெரியுமா.?!
இந்த மீன்களை சாப்பிட்டால், மரணம் கூட தள்ளிப் போகும்.! ஏன் தெரியுமா.?!
பொதுவாக அசைவ உணவுகள் சாப்பிடுவது பலருக்கும் பிடிக்கும். ஆனால், அதில் மிகவும் சிறந்தது மீன் வகைகள் தான். ஏனெனில், மீன் வகை உணவுகளில் அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளது. அப்படிப்பட்ட, மீன் வகைகள் சாப்பிடுவதால் என்ன என்ன பயன்கள் கிடைக்கும் என்று இந்த பதிவில் காணாலாம்.
மீன்கள் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் :
வாரத்தில் இரண்டு நாட்கள் மீன்களை சாப்பிடுவது நம் உடல்நலத்திற்கு அதிக ஆரோக்கியத்தை அளிக்கும். மேலும், இதில் உள்ள அயோடின், கால்சியம், புரோட்டின், மெக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின்ஸ் மற்றும் இரும்புச்சத்து போன்றவை இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்கிறது.
அதுமட்டுமால்லாமல், சில மீன் வகைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் சற்று அதிகமாகவே உள்ளது. இதனால், இரத்த குழாயில் ஏற்படும் பிரச்சனைகள் சீராகும். மேலும், இதயநோய் மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் மீன்களை சாப்பிட்டு வந்தால் இது போன்ற பிரச்சனைகள் குணமாகும்.
கண் மற்றும் மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள் மீன்களை சாப்பிடுவதால் இந்த பிரச்சனைக்கு நல்ல பலன் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல், உடல் எடையை சீராக வைத்துக்கொள்வதற்கு அசைவ உணவுகளில் மீன்கள் முக்கியப்பங்கு வகிக்கிறது.
மீன் வகைகளில், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ள மீன் வகையான மத்தி, சால்மன், நெத்திலி, ட்ரவுட், கானாங்கெளுத்தி மற்றும் டுனா ஆகியவை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்பது குறிப்பிடத்தக்கது.